உலக ரத்ததான நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
ஆற்காடுடில் ரத்ததானம் செய்த ரத்தக் கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா எம் எல் ஏ சுகுமார் பங்கேற்பு!!!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் APJ trust for future India Heroes of emergency அவசர காலங்களில் ரத்ததானம் செய்த ரத்தக் கொடையாளர்கள் கௌரவிக்கும் விதமாக அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
டிரஸ்ட் பொறுப்பாளர் M.G.கோபிநாத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையின் ரத்ததான பிரிவு டாக்டர், செவிலியர்கள், ரத்த பரிசோதனை அலுவலர்கள் கலந்து கொண்டு இந்த ரத்ததான முகாமை சீரும் சிறப்புமாக நடத்திக் கொடுத்தனர் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் S.M.சுகுமார் MLA, அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வணிகர் சங்க தலைவர் பொண் கு.சரவணன் ஆற்காடு நகர கழக செயலாளர் ஜிம் M.சங்கர், ஆற்காடு காமராஜர் அறக்கட்டளை தங்கபாண்டியன், ஆற்காடு அகத்தியர் சேவா அறக்கட்டளை கே கணேஷ், ஆற்காடு ஸ்ரீ ஜோதிலிங்கேஸ்வரர் அறக்கட்டளை ஜெய் மாருதி சரவணன், இமைகள் அறக்கட்டளை பாருக் ரத்ததான கொடை வள்ளல் குமரன் ரவிசங்கர் சமுக சேவை ஆர்வலர் சாய்பாபா ஆதித் ராகவன் உட்பட 500மேற்பட்டோர் திரளான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை