குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள்உற்சாக குளியல்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே பெய்ததால் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து துவங்கி சீசன் துவங்கியது
இந்தாண்டுசீசன் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி ஜூலை ஆகஸ்ட் மாதம் என மூன்று மாதங்கள் களைக்கட்டும் அந்த வகையில் சீசன் தற்போது களைகட்ட துவங்கியுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக பல பகுதிகளில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள அனைத்து அருவிகளிலும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.
பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு மட்டும் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் கோரிக்கை வைத்து குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் அனைத்து அருவிகளிலும் உல்லாசமாக உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்..






கருத்துகள் இல்லை