சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில்மதுக்கடை எண்.63 நிரந்தரமாக அகற்றிட வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியது
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி சார்பாக அண்ணா திருமண மண்டபம் எதிரே உள்ள மதுக்கடை எண்.63 நிரந்தரமாக அகற்றிட வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியது.
பள்ளி மாணவ மாணவியருக்கும்,மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கின்ற பழைய வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெரு அண்ணா திருமண மண்டபம் எதிரே உள்ள மதுக்கடை எண்.63 நிரந்தரமாக அகற்றிட வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இராயபுரம் பகுதி குழு சார்பாக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பகுதி செயலாளர் ஜீலானி,துணைச் செயலாளர் தியாகராஜன், வட்டச் செயலாளர் வண்ணை விஜயன், துணைத் தலைவர்கள் கோபால்,சிவகுமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கையெழுத்து இயக்கத்தில் பங்கு கொண்டனர்






கருத்துகள் இல்லை