காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.சுரேஷ் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும்,சிவகாஞ்சி காவல் நிலையமும் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.பேரணியை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.சுரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பள்ளி முதல்வர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். பேரணி நாராயணகுரு பள்ளியிலிருந்து தொடங்கி ராஜவீதிகள் வழியாக மீண்டும் பள்ளியில் வந்து நிறைவு பெற்றது.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் குடிபோதையில் குடும்பத்தை இழக்காதீர்,புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், போதை நம்மை பேதையாகும் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பிக் கொண்டே ஊர்வலத்தில் வந்தனர்.நிறைவாக சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் நன்றி கூறினார்.






கருத்துகள் இல்லை