• சற்று முன்

    காஞ்சிபுரம் கந்தப்பர் கோயிலில் மகா கும்பாபிஷேகம், காஞ்சி சங்கராசாரியர் நடத்தி வைத்தார்.


    காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ள வள்ளி,தேவசேனா சமேத கந்தப்பர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தினைகாஞ்சி சங்கராசாரியர் சுவாமிகள் நடத்தி வைத்தார்.

    காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது வள்ளி,தேவசேனா சமேத கந்தப்பர் கோயில்.இக்கோயில் மிகவும் பள்ளமாக இருந்ததை 6 அடி உயரம் அஸ்திவாரத்திலிருந்து உயர்த்தி புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் இம்மாதம் 21 ஆம் தேதி வி.ஷண்முகம் குருக்கள் மற்றும் ஆர்.மகேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் கணபதி பூஜையுடன் தொடங்கியது.மயிலின் மீது ஆறுமுகம், 12 கரங்களுடன் ஷண்முகர் வள்ளி,தெய்வானையுடன் மூலவராக இக்கோயிலில் முருகப்பெருமான் தெற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    கோயில் திருப்பணிகள் காஞ்சிபுரம் அக்சயம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் புனிதநீர்குடங்கள் மூலவர் கோபுரம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தினை காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார்.இதனைத் தொடர்ந்து மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளையும் ஆலய அர்ச்சகர்கள் வி.கிட்டப்பா மற்றும் ஏ.சதீஷ் சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தினார்கள்.முன்னதாக ஆலயத்தின் முன்பாகவுள்ள கற்பக விநாயகர் ஆலயத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad