• சற்று முன்

    காஞ்சிபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு



    காஞ்சிபுரம் உபநிஷத் பிரமேந்திர மடத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.



    பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உபநிஷத் பிரமேந்திர மடத்தில் அகஸ்தீஸ்வர சுவாமி,ஹயக்ரீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி மற்றும் பக்த ஹனுமன் சந்நிதி ஆகியன ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.இக்கோயிலில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பல யோகிகளால் சின்னச்சின்ன அக்சரங்களால் செய்யப்பட்ட ஸ்ரீராம யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இந்த யந்திரம் போல வடிவமைக்கப்பட்டு அதனை அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூலமாக கொண்டு செல்லப்பட்டு அயோத்தியில் ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

    இக்கோயில் மகா கும்பாபிஷேகத்திற்காக முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டது.கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் இம்மாதம் 24 ஆம் தேதி கோ.பூஜை,விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.வியாழக்கிழமை யாகசாலையில் இருந்து புனித நீர்க்குடங்கள் கோபுரத்துக்கு சிவாச்சாரியார்களால் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கும்பாபிஷேகத்தினை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார். விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான கல்வெட்டு ஒன்றினையும் நிதியமைச்சர் திறந்து வைத்தார்.முன்னதாக கோயிலை கட்டிய கட்டிடக்கலைஞர்களுக்கு சால்வைகள் அணிவித்து பாராட்டினார்.முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.ஏற்பாடுகளை சங்கர மடத்தின் செயலாளர் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி,மூத்த மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad