• சற்று முன்

    காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 173 பேருக்கு பணி நியமன ஆணைவேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் கி செந்தில்குமார் வழங்கினார்.


    காஞ்சிபுரம்,ஜூன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில்173 பேருக்கு பணி நியமன ஆணைகளை வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் கி.செந்தில்குமார் வழங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் ராயல் என்பீல்டு, பாஸ்கான், கிளாசிக், கிட்டாச்சி மற்றும் டி.வி.எஸ் நிறுவனம் உட்பட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மனிதவளத் தேவையை தேர்வு செய்தார்கள். ஆண்கள் 292, பெண்கள் 222 பேர் உட்பட மொத்தம் 514 வேலைநாடுநர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இவர்களில் ஆண்கள் 99 பேரும்,பெண்கள் 74 பேரும் உட்பட மொத்தம் 173 பேருக்கு வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் கி.செந்தில்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


    காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் : M.விஜய் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad