• சற்று முன்

    இறப்பு சான்றிதழ் வழங்க ரூ. 900 லஞ்சம் பெற்ற அரசு பெண் மருத்துவர் விஜிலென்ஸ் போலீசில் கையும், களவுமாக பிடிபட்டார்!



    இறப்பு சான்றிதழ் வழங்க ரூ. 900 லஞ்சம் பெற்ற அரசு பெண் மருத்துவர் விஜிலென்ஸ் போலீசில் கையும், களவுமாக பிடிபட்டார்!

    வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்திற்கு உள்ளடக்கிய பள்ளிகுப்பம் பகுதியில் அரசு நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவராக வெங்கடலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் பொறிவைப்பு நடவடிக்கையின் பேரில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

    வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அக்கிரெட்டிபுதூரைச் சேர்ந்தவர் ரங்கன். இவர் தனது 3 குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் கேட்டு காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வெங்கடலட்சுமியை சந்தித்து தனது குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு பெண் மருத்துவர் வெங்கடலட்சுமி ஒரு குழந்தைக்கு தலா ரூ. 300 வீதம் 3 குழந்தைகளுக்கும் ரூபாய் 900 தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் இந்த பணத்தை கொடுக்க விருப்பமில்லாத ரங்கன் நேரடியாக வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணியிலிருந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மைதிலியிடம் நடந்தவற்றை கூறி  மருத்துவர் வெங்கடலட்சுமி லஞ்சம் கேட்பது குறித்து தகவல் தெரிவித்தார். 

    பின்னர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மைதிலி புகாரை பெற்றுக் கொண்டு அவர்களின் அறிவுறுத்தலின்படி புகார் அளித்த ரங்கனிடம் ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் 900 ஐ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் வெங்கடலட்சுமியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அதன்படி ரங்கன் பள்ளிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த மருத்துவர் வெங்கடலட்சுமியிடம் ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் 900ஐ கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கி தனது பையில் வைத்துக்கொண்டார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான போலீசாரால் சுற்றி வளைத்து மருத்துவர் வெங்கடலட்சுமியை கையும், களவுமாக கவுக்கென்று பிடித்து கைது செய்து  அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் சான்றிதழ்களை பெற்று பெண் மருத்துவர் மீது வழக்குப் பதிந்து வேலூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் வேலூர் தொரப்பாடி அரசு மகளிர் சிறையில் காவலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad