• சற்று முன்

    வட மொழிக்கு பை பை சொன்ன அண்ணா



    தமிழில் சமஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், 'ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி' போன்ற வடமொழி அடைமொழிகளுக்கு மங்களம் பாடி, அசல் தமிழ் அடையாளத்தை அரியணையில் ஏற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று. 

    1967 ஏப்ரல் 26-ம் தேதி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசு, அரசு கோப்புகளிலும் பொதுவழக்கிலும் "திரு, திருமதி, செல்வி" ஆகிய தூய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என அதிரடி ஆணை பிறப்பித்தது. 

    வடமொழி வாசனை வீசிய பெயர்களுக்கு முன்னால், தமிழ் மணக்க வேண்டும் என்ற இவர்களின் பிடிவாதம், வெறும் சொல்லாடல் மாற்றமல்ல; அது அடிமைப்பட்டுக் கிடந்த மொழி உணர்வுக்குக் கிடைத்த விடுதலை.

     "ஸ்ரீ" போட்டால் தான் மரியாதை கூடும் என்று நினைத்தவர்களின் மண்டையில் குட்டு வைத்து, 'திரு' என்கிற ஒற்றைச் சொல்லில் தமிழின் கம்பீரத்தை நிலைநிறுத்திய இந்த அரசாணை வெளியாகி இன்றோடு 59 ஆண்டுகள் ஓடிவிட்டன.  பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டிருந்த அந்நிய மோகத்தை விரட்டியடித்து, தமிழைத் தட்டி எழுப்பிய அண்ணாவின் இந்தச் சீர்திருத்த நடவடிக்கை, இன்றும் தமிழ் மண்ணில் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad