• சற்று முன்

    கணவர் மீது சிமென்ட்கலவை ஊற்றி மூடிய மனைவி





    கணவர் மீது சிமென்ட் ஊற்றி மூடிய மனைவி - வலிக்காமல் இருக்க மயக்க மருந்து கொடுத்துக் கொடூரச் செயல் எகிப்தின் பாரம்பரியப் பண்டிகையான 'ஷாம் நசீம்' கொண்டாட்டத்திற்குத் தன்னை அழைத்துச் செல்லாததால், யாஸ்மின் என்ற பெண் தனது கணவர் இசாம் மீது அதீத கோபமடைந்துள்ளார். 

    இந்தக் கோபத்தின் உச்சத்தில், அவர் செய்த செயல் உலகையே உலுக்கியுள்ளது. முதலில் கணவருக்குத் தேநீரில் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல வைத்துள்ளார் யாஸ்மின். 

    பின்னர், இரண்டு மூட்டை சிமென்ட்டைத் தயார் செய்து, மயக்கத்தில் இருந்த கணவரின் உடல் முழுவதும் ஊற்றிப் பூசியுள்ளார். சிமென்ட் கலவை உடல் முழுவதும் இறுகும் வரை காத்திருந்து கணவரைச் சித்திரவதை செய்துள்ளார் அந்தப் பெண். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பாறை போல இறுகிய சிமென்ட் கலவைக்குள் இருந்து இசாம் என்பவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாஸ்மினை கைது செய்துள்ள எகிப்து போலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad