குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

போரில் அணு குண்டுகள் வீசப்பட்டால் சேதாரம் கூடுதலாக இருக்கும் என அச்சப்படுகின்றனர்

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் அணுகுண்டுகள் வீசப்படும் சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி வீசப்பட்டால் அது அந்த நாட்டின் இறுதி கட்ட உத்தரவாகவே இருக்கும். இப்போதுள்ள அணுகுண்டுகளில் சூப்பர் ஸ்டாராக இருப்பது Tsar Bomba (RDS-220) எனப்படும் 50 மெகா டன் வலிமை கொண்ட அணுகுண்டாகும்.

இது ஒரு நாட்டின் மீது வீசப்பட்டால் கிட்டத்தட்ட மூன்று மைல் விட்ட அளவிற்கு தீப்பந்து (fire ball)ஒன்று உருவாகி, சூரியனை விட வெப்பமாகி கடினமான கட்டிடங்களையே எரித்து தூசி மண்டலமாக மாற்றிவிடும். 

உதாரணத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற ஒரு நகரம் சில விநாடிகளுக்குள் காணாமல் போயிருக்கும். இது தவிர ஷாக் வேவ் ( Shock wave) எனப்படும் அணுகுண்டின் அதிர்வலைகள் 50 மைல் வரை பரவி, அங்கே இருக்கும் வாகனங்கள் பற்றி எரியும். பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே உடனடியாக இறந்து விடுவார்கள். 50 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள நகரங்களில் நெருப்புப் புயல் ( Fire storm)உருவாகி, ஆக்ஸிஜன் அழிக்கப்பட்டு மக்கள் சுவாசிக்க முடியாமல் மெல்ல மெல்ல மரணமடைவார்கள். மேலும், ரேடியேஷன் ஃபால்அவுட் காற்றில் பரவி, மனிதர்களின் மரபணு சேதமாகி  குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படும். மழை நீரில் அணுக்கதிர் வீச்சு கலந்து விளை நிலங்கள் விஷமாகும். பொருளாதாரம், உள்கட்டமைப்பு அழியும்; மக்கள் அகதிகளாக மாறி இடம்பெயர்வார்கள், உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு வாழ்க்கை நரகமாகும். இது போன்ற ஒரு வருடத்தை அணு விஞ்ஞானிகள் 'ஊதா ஆண்டு' என்று அழைக்கிறார்கள்.


கருத்துரையிடுக

புதியது பழையவை