இந்தியாவுக்கு வந்த கப்பலை தாக்கியது யார் ?
ஐக்கிய அரபு அமீரகத்தின் கலிபா துறைமுகத்தில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த ‘மயூரி நாரி’ என்ற எண்ணெய்க் கப்பலில் இந்தியாவுக்காக 30,000 டன்கள் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டது. இந்த கப்பல் குஜராத்தின் கண்டலா துறைமுகத்துக்கு வர வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வந்தபோது, இந்த கப்பல் மீது மர்மமான முறையில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. உடனே கப்பலில் இருந்த 20 ஊழியர்கள் மிதவை மூலம் கடலில் குதித்து தப்பினர். அவர்களை ஓமன் கடற்படை காப்பாற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டது. கப்பலில் இருந்த 3 ஊழியர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. 178 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட ஆயில் டேங்கர் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியது யார்? - இந்த தாக்குதல் எப்படி நடைபெற்றது, எங்கிருந்து நடத்தப்பட்டது என தாய்லாந்து கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.






கருத்துகள் இல்லை