• சற்று முன்

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்து


    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், மாணிக்யம்மகுடா பகுதியில் இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர விபத்தில், பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாகத் தாழ்வாகச் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் மீது மோதியது. மோதிய அடுத்த கணமே மின்சாரம் பாய்ந்ததில் லாரியில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தன. 

    இந்த விபத்தின் கோரத்தால் அந்தப் பகுதியே கரும்புகையால் சூழப்பட்டதுடன், அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிர் தப்பியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் தாழ்வாகச் சென்றதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் நிலையில், இது குறித்து மின்சாரத் வாரியம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad