சீனாவின் சில நகரங்களில் உள்ள சாலைகளில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'ஸ்மார்ட் மின்விளக்குகள்' (Smart Lamps) பொருத்தப்பட்டு வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மின்விளக்குகள் மற்ற சாதாரண விளக்குகளைப் போல மின்சாரத்தை மட்டும் நம்பியிருக்காமல், அவற்றின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ரக செங்குத்து காற்றாலைகள் (Compact Vertical Wind Turbines) மூலம் சுயசார்புடன் இயங்குகின்றன. சூரிய ஒளி இல்லாத மேகமூட்டமான காலங்களிலும், மிதமான காற்று வீசும் போதே இந்த காற்றாலைகள் சுழன்று தடையின்றி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படுவதோடு, நகரத்தின் மின்சாரத் தேவையும் பெருமளவு குறைகிறது.
இந்த ஸ்மார்ட் விளக்குகளில் சென்சார்கள் மற்றும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதால், இவை ஆற்றல் சேமிப்புடன் சேர்த்து நகரப் பாதுகாப்பிற்கும் பெரும் உதவியாக அமைகின்றன.