பேருந்தின் ஜன்னலில் தலைகீழாகத் தொங்கிய சிறுமியைப்பாதுகாப்பாக மீட்டிய அதிகாரி
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜி நகரில், ஓடும் பேருந்தின் ஜன்னலில் தலைகீழாகத் தொங்கிய சிறுமியைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
பேருந்து திரும்பும்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக நழுவிய அந்தச் சிறுமி, கால்கள் மட்டும் ஜன்னலில் சிக்கிய நிலையில் தலைகீழாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பணி முடிந்து போய் கொண்டிருண்ட காவல்துறை அதிகாரி வு ஷெங்சே (Wu Shengze), இதைக் கண்டு உடனடியாகப் பேருந்தைத் துரத்திச் சென்று, சில நொடிகளில் அச்சிறுமியைத் தூக்கிப் பிடித்துப் பத்திரமாக மீட்டார்.
ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்ட இந்தச் சம்பவம், அந்த அதிகாரியின் சமயோசித புத்தி மற்றும் வீரத்திற்குச் சான்றாக அமைந்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.







கருத்துகள் இல்லை