• சற்று முன்

    ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும்பணியை ஊராட்சி தலைவர் க.சுவிதா கணேஷ் துவக்கி வைத்தார்.


    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் 250 மரக் கன்றுகள் நடும்பணியை ஊராட்சி தலைவர் க.சுவிதா கணேஷ் துவக்கி வைத்தார். மாதனூர் ஊராட்சி ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு ஊராட்சியில் பழைய மனை பகுதியில்  பசுமைபடுத்த மரக்கன்று நடும் பணி துவங்கியது. இதை ஒட்டி நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் க.சுவிதா கணேஷ் தலைமை தாங்கி 250 மர கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைதலைவர்.விஜய், வார்டு கவுன்சிலர்கள். ஜெயந்தி ராமமூர்த்தி, சுகன்யா, ஜெயப்பிரகாஷ், ஊக்குனர்.ரேகா, மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad