ஆற்காட்டில் நடைபெற்ற வேந்தர் டாக்டர். ஏ.எஸ்.கணேசன் கோப்பை போட்டிகள்! பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டி!!!!
ராணிப்பேட்டை மாவட்டம், விநாயகா மிஷன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (சென்னை வளாகம்) சார்பில், வேந்தர் டாக்டர்.ஏ.எஸ்.கணேசன் கோப்பைக்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஏவிஎஸ் (YDVC) விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றன.
இந்த போட்டிகளில் 25 பள்ளிகளின் மாணவர் அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். விநாயக மிஷின் ரிசர்ச் ஃபவுண்டேஷன் வேந்தர் டாக்டர்.ஏ.எஸ்.கணேசன் அவர்களின் அறிவுறுத்தல் படி வீ.எம்.சி.சி. விளையாட்டு துறை இயக்குனர் டாக்டர் ஓம்பிரகாஷ், துணை இயக்குனர், கா.துரைப்பாண்டி ஆகியோரின் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்பட்டன.மாவட்ட விளையாட்டு அலுவலர். ச.ஞானசேகரன், வருமானவரித்துறை அலுவலர் சரவணன், மாவட்ட உடற்கல்வி அலுவலர் மற்றும் செந்தில் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தார்கள். இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஏ. வி. சாரதி, (AVS - YDVC) தலைவர் மற்றும் பூரன்சந்துமீனா வருமான வரித்துறை அதிகாரி, ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதல் பரிசு – ரூ.5,000 இரண்டாம் பரிசு – ரூ.4,000 மூன்றாம் பரிசு – ரூ.3,000 நான்காம் பரிசு – ரூ.2,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விநாயகா மிஷன் அறக்கட்டளை பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
இந்த போட்டிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரபு,பிச்சைமணி, முருகானந்தம்,தினேஷ், கோவிந்தராஜ் ,மகேஷ், கார்த்திக்,செந்தில், டேவிட்,காதர் ஷெரிப், உமா, பிரியா,சின்னராசு மற்றும் மல்லிகேஷ்குமார் கைப்பந்து பயிற்சியாளர் ஆகியோர் நடுவராக பணியாற்றி இந்த போட்டிகளை சிறப்பித்தனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.






கருத்துகள் இல்லை