வாணியம்பாடி தாலுக்கா தளபதி அறிவாலயத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அவசர செயற்குழு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி தளபதி அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் வி.எஸ். ஞானவேலன், தலைமையில் நடைபெற்றது,
கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் மு. அசோகன் தலைமை பொதுக்குழு உறுப்பினர். பெருமாள் கோவிந்தம்மாள் ஒன்றிய கழக நிர்வாகிகள்.எம் சி. ராமநாதன்,எம் சி தசரதன், தோ.குமார் , வி.வெங்கடேசன், சி.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகிதனர். இதில் SIR பணிகள் குறித்து BLA2 மற்றும் BDA உள்ளிட்ட நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது, மேலும் இந்த கூட்டத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி பிரச்சார கூட்டங்கள் ஆலங்காயம் ஒன்றியத்தில் சிறப்பாக நடத்தி முடிந்ததற்கு கிளை கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பிஎல்ஏ, பிடிஏ, ஐ டிவி இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோருக்கு ஒன்றிய செயலாளர் வி எஸ்.ஞானவேலன் நன்றி தெரிவித்தார்,
மேலும் மாவட்ட செயலாளர் க. தேவராஜ் அவர்கள் அறிவுரிதலின் பேரில் ஒருங்கிணைந்த ஆலங்காயம் ஒன்றியம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்த ஆலோசனை மேற்கொள்ளபட்டது, மேலும் வரும் பொங்கல் பண்டிகையை திராவிட பொங்கலாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். ஞானசேகரன் நன்றி கூறினார், இதில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிரிசமுத்திரம் கணேசன் ,வெங்கடேசன் , அருண்குமார் மற்றும் ஐடி விங் நிர்வாகிகள் ராஜு, ஸ்ரீராம்,மெக்கானிக் நாகராஜ், பள்ளிப்பட்டு செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






கருத்துகள் இல்லை