சிறாவயல் திடலில் காந்தி_தோழர்_ஜீவா அவர்களுக்கு திருவுருவ சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபம் திறப்பு விழா
1952ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முதன் முதலில் கோரிக்கை வைத்தவர் தோழர் ஜீவானந்தம். அவருக்கு மணிமண்டபம் அமைத்தது பெருமையாக உள்ளது - கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாகம்!*
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே,சிறாவயல் திடலில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா_காந்தி_தோழர்_ஜீவா அவர்களுக்கு திருவுருவ சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். முதல்வர் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தபின்பு கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான கூட்டம் கூட்டமாக அரங்கத்தை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில்,
தோழர் ஜீவானந்தம் - மகாத்மா காந்தியடிகள் இருவருக்கும் இடையே கடித தொடர்பு அதிகமாக இருந்தது. காந்தியடிகளின் நல்ல கருத்தை ஏற்பதும், ஏற்க முடியாத கருத்துக்களை எதிர்த்து கடிதம் எழுதுவதும் ஜீவானந்தத்திற்கு வழக்கம்.
இதனாலேயே தமிழகத்திற்கு வரும் பொழுது ஜீவா உன்னை சந்திப்பதாக காந்தி கூறியிருந்தார். அதன்படி 1927 ஜீவாவை சிராவயல் அருகே காந்தி சந்தித்தார். அதன் நினைவாகவே தற்பொழுது இந்த மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. 1952ல் வண்ணாரப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக ஜீவானந்தம் இருந்த பொழுது, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முதன் முதலில் கோரிக்கை வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இவர் ஒரு பொக்கிஷம்.
முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் வைத்த கோரிக்கையை ஏற்று இன்று இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது. எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பெருமையோடு தெரிவித்தார்.
சிலுக்கு சிப்பா என் உடம்பை தொட்டதும் இல்ல... நான் வாழ்க்கையில சிரித்ததாக ஞாபகம் இல்லை .... என்று சிரிப்பையே பார்க்காத, சுதந்திர போராட்ட தியாகி, பாட்டாளி மக்கள் போராளி ஜீவானந்தத்திற்கு மணிமண்டபம் எழுப்பி திறப்பு விழா நடத்திய முதல்வருக்கு அத்தாட்சியினர் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட தலைமை செய்தியாளர் : சண்முக சுந்தரம்






கருத்துகள் இல்லை