ராணிப்பேட்டையில் மக்கள் தேசம் கட்சியின் பறையர் பேரின அரசியல் மீட்பு மாநாடு நடைபெற்றது.
"திருத்தணி பகுதியில் பள்ளி மாணவன் மரண வழக்கில் மக்கள் தேசம் கட்சி நடத்திய போராட்டம் 20 லட்சம் இழப்பீடு பெற்று தந்தது என பேச்சு!!!!
450வன்கொடுமை வழக்குகளில்04 சதவீதம் தண்டனை பெற்றுதராத தமிழக அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது!!! ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் தேசம் கட்சியின் பறையர் பேரின அரசியல் மீட்பு மாநாட்டில் தலைவர். ஆசைதம்பி சாடல்!!!
ராணிப்பேட்டை மாவட்டம், முத்துகடை பகுதியில் மக்கள் தேசம் கட்சி சார்பில் பறையர் பேரின அரசியல் அதிகார மீட்பு மண்டல மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநிலச் செயலாளர் கருணாநிதி, மாநில துணைச் செயலாளர் பாஸ்கரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மதியழகன், வழக்கறிஞர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஜி. குட்டி (வசந்தகுமார்), கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், மேற்கு மாவட்ட அமைப்பாளர் சாந்தகுமார், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த மாநாட்டிற்கு மக்கள் தேசம் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான A. ஆசைத்தம்பி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் உரையில், “இயற்கை தடைகள், மழை உள்ளிட்ட இடையூறுகளையும் மீறி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மாநாட்டில் அமர்ந்து இருந்தது சாதாரண விஷயம் அல்ல. சமூக விடுதலைக்கான தியாகம் இருந்தால் 10 மணி நேரம் கூட போராளிகளை அமர வைத்து உண்மையை எடுத்துச் சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார். திருத்தணி பகுதியில் பள்ளி மாணவன் மரண வழக்கில் மக்கள் தேசம் கட்சி நடத்திய போராட்டத்தின் விளைவாக,மாணவனின் தந்தைக்கு அரசு வேலை,ரூ.20 லட்சம் இழப்பீடு,வீட்டிற்கான பட்டா,வீடு கட்ட உத்தரவு,மாணவனின் தம்பிக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்பட்டதை நினைவூட்டினார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் 450-க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தண்டனை பெற்ற வழக்குகள் வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது வெட்கக்கேடானது என கடுமையாக விமர்சித்தார். சேலம் கலவாய்ப்பட்டி ராஜலட்சுமி வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தந்தது மக்கள் தேசம் கட்சியின் சட்டப்போராட்டம் என்பதை நினைவுபடுத்தினார்.
“காவல்துறை அதிகாரிகள் தவறு செய்வதில்லை; அவர்களை தவறு செய்ய வைப்பது ஆட்சியாளர்கள். மக்கள் தேசம் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட முயன்றால், அதற்கு சட்டரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்தார்.
சட்டமன்றத்தில் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் உருவப்படத்தை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகக் கூறிய அவர்,
“அதற்காக எவரிடமும் கெஞ்ச மாட்டோம். மக்கள் தேசம் கட்சியின் பிரதிநிதிகள் சட்டமன்றம் சென்றே அந்த உரிமையை நிலைநாட்டுவோம்” என உறுதியளித்தார். “எங்கள் சமூகத்திற்காக உண்மையாக போராடுபவர்களுடன் மக்கள் நிற்க வேண்டும். விற்பனை அரசியலுக்கு மக்கள் தேசம் ஒருபோதும் இடம் தராது” எனக் கூறி, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மாநாட்டில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், விசாரம், ஆற்காடு, திமிரி, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். மாநாட்டின் இறுதியில் ராணிப்பேட்டை மாவட்ட துணைச் செயலாளரும் உடற்கல்வி ஆசிரியருமான காரை விமல் குமார் நன்றி உரை வழங்கினார்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை