• சற்று முன்

    வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் ஏழாச்சேரியில் சமத்துவ பொங்கல் விழா: பெண்கள் கும்மியடித்து கொண்டாட்டம் !

    செய்யாறு அடுத்த ஏழாச்சேரி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழாவை, பெண்கள் கும்மியடித்து கொண்டாடியதால் கிராமமே குலுங்கியது. 


    செய்யாறு அடுத்துள்ளது ஏழாச்சேரி கிராமம். இங்கு சமத்துவ பொங்கல் விழா வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகம்மாள் கலைமணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு - கும்மியடித்து கொண்டாடினர். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்களாக அரசு, லோகநாதன், விஸ்வநாதன், வெங்கடேஷ் பாபு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தி.மு.க., ஆட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். ஏழாச்சேரி, சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தாருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 


    கோலப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான தினகரன், கலைஞர் பாஸ்கர், ராஜேந்திரன், ஞான சவுந்தரி, சந்திரசேகர், பிரபு மற்றும் கிராம பொது மக்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சி தலைவரின் மகன் முத்து நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad