• சற்று முன்

    வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா


    வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு!

    வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் அஜினமோட்டோ எனப்படும் உணவுக்கு சுவையூட்டும் பொருளை அதிக அளவில் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த அஜினமோட்டோ சிகப்பு நிறத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கரும்பு மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் இருந்து இயற்கை நொதித்தல் செயல்முறை மூலம் அஜினமோட்டோ தயாரிக்கப்படுகிறது. இந்த அஜினமோட்டோ சேர்த்த உணவை சாப்பிடுவதால் உணவு சுவையாக இருக்கும் .ஆனால் நாளடைவில் அதுவே பல்வேறு அபாயகரமான நோய்களை விளைவுகளை கொண்டு வரும் என்று உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூறுகின்றனர் .இதை தடை செய்யப்பட்டதாக அறிவித்தும் உணவகங்களில் பயன்படுத்துபவர்கள் இதை நிறுத்தாமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டிய உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கண்டும் காணாமல் விட்டு விட்டதால் உணவகங்களை நடத்துவோர் தங்கள் விருப்பம் போல் அஜினமோட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். ஆதலால் விரைவில் காட்பாடி மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் தங்கள் குழுவினருடன் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டு இந்த அஜினமோட்டாவை அதிக அளவில் பயன்படுத்தும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாடிக்கையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இனி உணவு கட்டுப்பாட்டு அலுவலர்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad