மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்ட பெயரை மாற்றிய பாஜக அரசைக் கண்டித்து மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மனு அளிக்கும் நூதன போராட்டம்....
கடந்த 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) பெயரை மத்திய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விக்சித் பாரத் கியாரண்டி பார் ரோஜ்கர் அன்ட் அஜ்விகா கிராமின் VIKSIT BHARAT GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION GRAMIN ( VB G RAM G) என்று பெயர் மாற்றம் செய்திடவும், அந்தத் திட்டத்தின் பங்களிப்பை மத்திய அரசு 60% மாநில அரசு 40% தர வேண்டுமென நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வந்துள்ளது. அதை கண்டிக்கின்ற வகையிலும், தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தின் பெயரை மாற்றுவதை உடனடியாக கைவிடக் கோரியும வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சியின் நிறைவில் மகாத்மா காந்தி அடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மனு அளித்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள்






கருத்துகள் இல்லை