தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அவர்கள் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ரோடு, செட்டிபாளையம், ஏ.எம் மஹாலில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து விற்பனையினை தொடங்கி வைத்தார்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, கைத்தறி நெசவுத் தொழில் என்பது இந்தியாவின் பாரம்பரியமான. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிலாகும். இது நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இத்தொழில் கைவினைத்திறன் மற்றும் நுட்பமான நெசவு வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்று. தமிழ்நாட்டில் இத்தொழில் செழித்து வளர்த்துள்ளது. இத்தொழிலானது பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும், தொழிலை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சித் கழகத்தின் மூலம் 2025-2026-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின் மூலம் இன்று முதல் 12.01.2026 வரை 14 தினங்களுக்கு இக்கண்காட்சியானது நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் ஈரோடு, காஞ்சிபுரம். சேலம், திருநெல்வேலி.நாகர்கோவில், திருப்பூர், கடலூர், கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களின் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், ஈரோடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். நெசவாளர் சேவை மையம். பூம்புகார் விற்பனை நிலையம். காதி கிராம தொழில் வாரியம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் வெளிமாநில கைத்தறி சங்கங்கள்! நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர் மேலும் பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை பெருமளவில் வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி கண்காட்சி 60 அரங்குகள் அமைக்கப்பட்டு 116 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது போர்வைகள். படுக்கை விரிப்புகள். ஜமக்காளங்கள். மேட். துண்டுகள். கோரா சேலைகள், காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டு சேலைகள், சர்ட்டிங். வேட்டிகள் மற்றும் லுங்கிகள், வெளி மாநில ஜவுளிகள் மற்றும் இதர கைவினை பொருட்கள் ஆகிய ஜவுளி இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உற்பத்தியாகும் அனைத்து கைத்தறி ஜவுளி இரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 30% தள்ளுபடியில் வழங்கப்பட்டு வருகிறது. கண்காட்சியில் ரூ.2.00 கோடி அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.கந்தசாமி இ.ஆ.ப. ஈரோடு மாநகராட்சி மேயர் .நாகரத்தினம் சுப்பிரமணியம். சென்னிமலை பேரூராட்சி தலைவர் .ஸ்ரீதேவி. துணி நூல் பதனிடும் ஆலை செயலாட்சியர் (துணை இயக்குநர்) சிவக்குமார், நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் (சேலம்) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (கைத்தறி துறை) சரவணன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.






கருத்துகள் இல்லை