புதுப்பொலிவுடன் கட்டபட்ட வட்டார வேளாண்மை அலுவலக சீர்கேடு.
மேற்கண்ட கட்டிடம் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் ரூ 3.59 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 23.12.2024 அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறக்கப்பட்டது. இதனை நமது மாநில கைத்தறி மற்றும் துணினூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்.
திறக்கப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில் இரண்டாவது மாடியில் ஊழியர்கள் பணியாற்றும் அறையில் பெரிய அளவிலான சீலிங் இடிந்து விழுந்துள்ளது. உடனடியாக கட்டிட ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த அறையின் ஒரு பார்ட் மட்டும் அவசர அவசரமாக பூசி மெழுகப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டது.எனவே இந்த கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இந்த கட்டிடத்தினுடைய ஒப்பந்ததாரர் தான் தற்பொழுது மோசூர் பகுதியில் வட்டார வேளாண்மை அலுவலகத்தை கட்டி வருகிறார் இப்படிப்பட்ட ஒப்பந்ததாரரை கண்டுபிடித்து ஒப்பந்தத்தை வழங்குவது ஏன்... இனிவரும் காலங்களாவது இதுபோன்ற ஒப்பந்ததாரர்க்கு வேலை கொடுக்க கூடாது.
கருத்துகள் இல்லை