ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் கைது கண்டித்து சிஐடியுஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்வதோடு,தனியார்மயத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பல ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்கள் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்திதிங்களன்று (ஆக 18) சிஐடியு மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் என். ரமேஷ் தலைமையில் முத்துக்கடைபேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னைமாநகராட்சி தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை எதிர்த்து கடந்த 13 நாட்களாக வெயில் மழை பாராமல்நியாயமான கோரிக்கைகளுக்காக ரிப்பன் மாளிகை முன்பு அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டதூய்மை பணியாளர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வராமல் அப்பாவி தூய்மைப் பணியாளர்களை பலவந்தமாக கைது செய்து, கைபேசி பறிப்பது, பெண் தொழிலாளர்களை மிரட்டுவதுபோன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் சென்னை மாநகர காவல்துறையின் அத்துமீறல் கண்டிப்பதோடுபோராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர்பி. ரகுபதி, சிஐடியு மாவட்ட அமைப்பாளர் ஆ. தவராஜ், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள்ஏபிஎம். சீனிவாசன், காமராஜ், பி. மணி, ஆர். மணிகண்டன், தா. வெங்கடேசன், எஸ். முரளிதாஸ், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கேகேவி. பாபு, வாலிபர் சங்க நிர்வாகி செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்
கருத்துகள் இல்லை