ரூபாய் 6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணிகளை அமைச்சர் காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்-
தென்கடப்பந்தங்கள் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூபாய் 6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணிகளை அமைச்சர் காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்-நெமிலி அருகே மின்சார விபத்தில் கையிழந்த சிறுமிக்கு குடும்பத்திற்கு- அமைச்சர் காந்தி 6 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கலைஞர் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தங்கள் ஊராட்சயில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பெரிய ஏரி புனரமைத்தல் மற்றும் சிறுபாசன ஏரி புனரமைக்கும் பணிகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் பணிகள் மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்விற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக வருகை தந்து ஏரியில் சிறப்பு பூமி பூஜையை செய்து அடிக்கல் நாட்டில் பச்சைக்கொடி காண்பித்தபடி பணிகளை தொடங்கி வைத்தார்..
அதனைத்தொடர்ந்து ஏரியில் புனரமைக்கப்படும் இடத்தை மேற்கொள்ளப்படும் வரைபடத்தை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அமைச்சரிடம் காண்பித்தினர் தொடர்ந்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் பிரச்சினை மனு வாயிலாக அமைச்சரிடம் வழங்கினார்கள் நிகழ்வில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயசுதா வாலாஜா ஒன்றிய பெருந்தலைவர் சேஷாவெங்கட் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
பின்னர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த உலியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் வயது 40 கூலி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி சகிலா இவர்களுக்கு சஞ்சனா (13) யுவபாரதி (15) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் இவர்கள் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் உறவினர் வீடு கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது அங்கு மழை வந்ததால் இளைய மகள் சஞ்சனா மாடியில் உள்ள துணியை எடுக்க சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்..இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் மின்சாரம் தாக்கியதில் கை முழுவதும் சேதம் அடைந்ததால் கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் சாதாரண கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் உறவினர்கள் உதவியுடன் பல லட்சங்கள் செலவு செய்து தனது மகளின் உயிரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நன்றாக படித்த தன் மகளுக்கு இப்படி ஆகிவிட்டது என மிகுந்த மன உளைச்சலில் குடும்பமே வேதனையில் இருந்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கை பொருத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உறுதி அளித்ததை தொடர்ந்து சிறுமிக்கு கை அளவிடும் பணி நடைபெற்றது..
இந்த நிலையில் மின்சார விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ரூபாய் 6,62,000 லட்சம் மதிப்பிலான கலைஞர் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கியதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கூடிய விரைவில் செயற்கை பொருத்தப்படும் என சிறுமியிடம் கூறினார்..
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.
கருத்துகள் இல்லை