காஞ்சிபுரம் பிஏவி மேல்நிலைப்பள்ளி 9 ஆம் ஆண்டு விழா
காஞ்சிபுரம் பிஏவி மேல்நிலைப்பள்ளி 9 ஆம் ஆண்டு விழா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நேரம் தவறாமல், ஒழுக்கத்திற்கு 10,000 பரிசு.
காஞ்சிபுரத்தை அடுத்த கீழக்கதிர்பூரில் அமைந்துள்ள பிஏவி இண்டர் நேஷனல் மேல்நிலைப்பள்ளியின் 9 ஆம் ஆண்டு விழா அப்பள்ளி வளாகத்தில் மிக பிரம்மாண்டமான மேடை, பிரம்மாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் டாக்டர்.ஜே.மேரி ஸ்டெல்லா, பள்ளி தலைவர் பரமசிவம், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஆர் சி பள்ளியின் கண்காணிப்பாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் விடுமுறையை எடுக்காமல் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவிகளின் நேரம் தவறாமல் ஒழுக்கத்திற்காக பள்ளியின் சார்பில் வழங்கப்பட்ட ரூபாய் 10000, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
மேலும் பள்ளியில் பல்வேறு துறையில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்து, சிறப்புரை ஆற்றினார்கள். இதன் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கும்,அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில், தாம்பளத்தில் ஆடுவது, பானை மீது ஆடுவது, நெருப்புச் சட்டியில் ஆடுவது போன்ற வித்தியாசமான நடனங்கள் நடைபெற்றது. மேலும் சிறுவர் சிறுமிகள், மாணவ, மாணவிகள் பங்குபெற்ற ஆடல் நிகழ்ச்சிகளும் அனைவரையும் கவரும் வண்ணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர்கள் மற்றும் ஆசிரியைகள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
warch video reflecttn
கருத்துகள் இல்லை