• சற்று முன்

    "வேலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்!"- மாவட்ட ஆட்சியர்!

    வேலூர் மாவட்ட ஆட்சியர். வே.ரா.சுப்புலட்சுமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    "வேலூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர், நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 2-ம் தேதி முதல் மே மாதம் 2-ம் தேதி வரை வேலூர் மாவட்டதிலுள்ள 8 மையங்களில் நடைபெறவுள்ளது. 

    அதன்படி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணைக்கட்டு, திருவள்ளூவர் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கே.வி.குப்பம், அரசு மேல்நிலைப்பள்ளிகணியம்பாடி,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்பாடி, இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி பேரணாம்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி கொணவட்டம், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வேலூர் ஆகிய 8 மையங்களில்  நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் 

    266 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். நீட் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்சி கையேடுகள் வழங்கியும், சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும் மேலும், அப்பயிற்சியின் போது தினந்தோறும் அலகுத்தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படும்!"  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


     செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad