• சற்று முன்

    விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது, பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளின் பிரச்னைகளை அறிந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற து. ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பாலாறு வேளாண்மை கல்லூரியின் பத்து மாணவிகள்  ஹரிணி.செ ,ஜெய்ஶ்ரீ. பி.ஷி, ஜாஸ்மின் பாத்திமா.செ, ஜீவிதா.த, கனிகா.மு,கவிதா.ரா,  காவ்யகவி.பு.ரா, லாவண்யா.சி, லாவண்யா.சோ,லேகா சுருதி.ர ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    அனைத்துத் துறை அதிகாரிகளும் ,திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டனர். அதில் விவசாயிகள் தங்களது குறைகளை நேரடியாக கூட்டத்தில் முன்வைத்தனர். அதற்கு பதில்களும் தீர்வுகளும் அளிக்கப்பட்டன. கூட்டத்தின் மூலம் விவசாயிகளின் குறைகளையும், சட்டத்தின் குறைதீர்வையும் நேரடியாக மாணவிகள் கண்டு அறிந்தனர்.

    செய்தியாளர் : வாசு தேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad