• சற்று முன்

    இனி வருங்காலத்தில் அரசு திட்டங்கள் அனைத்தையும் பெற கைபேசி எண் உடன் ஆதார் இணைப்பது அவசியம் ஆட்சியர் கலைச்செல்வி.

    கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாதம்தோறும் நடைபெறும் விவசாய நலன் காக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. 

    நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு , கூட்டுறவுத் துறை சார்பில் 52 லட்சம் மதிப்பிலான விவசாய டிராக்டர் மற்றும் உப இயந்திரங்கள், பயிர்கடன்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விவசாய கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தனர். குறிப்பாக தற்போது தேசிய அடையாள எண் பதிவு முகாம் நடைபெறும் நிலையில் கூட்டுப் பட்டாக்களை அதில் இணைக்க முடியவில்லை என்பதால் பிரதமரின் விவசாய நிதியை பெற இயலாத நிலை ஏற்படும் என தெரிவித்தனர். 

    இதற்கு மாவட்ட வருவாய் துறை சார்பில் உரிய ஆலோசனை வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி, இனிவரும் காலங்களில் செல்போன் எண்னை ஆதார் எண்ணுடன் இனைப்பது அவசியம் எனவும், அது மத்திய மாநில அரசு திட்டங்கள் பெற எளிதாக இருக்கும் எனவும் உடனடியாக அதனை பதிவு செய்வதும் அதே எண்ணை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்துக் கொள்ளவும் வேண்டும் என தெரிவித்தார். 

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் வெங்கடேஷ் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் 


    செய்தியாளர் : திணேஷ் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad