மினி பேருந்து சேவை தொடங்க ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் மினி பேருந்து சேவை வழங்க வேண்டும் என அரசாணையின்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான காஞ்சிபுரத்தில் 29 வழித்தடங்களிலும், திருப்பெரும்புதூரில் 5 வழித்தடங்களிலும், குன்றத்தூர் 5 வழிதடங்களிலும் என மொத்தம் அனைத்து எல்லைக்குட்பட்ட கிராமங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கும் சிற்றுந்து பேருந்து சேவை 39 வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கியது,
அதில் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 29 வழிதடங்களுக்கு 27 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 வழித்தடத்திற்கு 2 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதனை குலுக்கல் முறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் சீட்டில் பெயர் எழுதி குலுக்கல் முறையில் சீட்டு எடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 26 வழித்தடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் 3 வழிதடங்களுக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை.
அதேபோல் திருப்பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 5 வழித்தடங்களுக்கு 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 வழிதடத்திற்கு 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதனை குலுக்கல் முறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வழிதடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. , திருப்பெரும்புதூரில் 1 வழித்தடத்திற்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை.
இந்நிகழ்வின்போது காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர் : திணேஷ்
கருத்துகள் இல்லை