• சற்று முன்

    மின் ஒயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

    வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே திருச்சியில் இருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் வந்தது. அப்போது பழைய வேலூர் பெங்களூரு சாலையில் உள்ள வேலூர் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடியுள்ளார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மோதியதில் ரயில்வே கேட் இரும்பு கம்பி உடைந்து உயர் மின் அழுத்த மின் கம்பி மீது விழுந்துள்ளது. பின்னர் அந்த ரயில் டவுன் ரயில்வே நிலையம் அருகிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 25க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு பயணிகள் விரைவு ரயில் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போன்று வேலூர் -பெங்களூரு சாலையில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் தடைபட்ட போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad