புதிய பேருந்து வழித்தடங்கள் தொடக்க விழா: அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு!
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகள் வழித்தடங்கள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச் செயலாளரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கொடியசைத்து புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், மாநகர செயலாளர் , வேலூர் தொகுதி எம்எல்ஏ ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, துணை மேயர் எம்..சுனில்குமார், காட்பாடி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, பகுதி, ஒன்றிய செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், போக்குவரத்து கழக நிர்வாகிகள், தோழர்கள் ,கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை