• சற்று முன்

    பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை: கண்டுகொள்ளாத மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வெங்கடேசன்!


    பேரணாம்பட்டு வி.கே. சாலையில் ஃபாரூக் என்ற தோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தோல் தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை தினமும் இரவு நேரங்களில் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மழைக் காலங்களில் மழை வெள்ளத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றுவதையும் வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் கொசுக் கடியால் தூக்கம் வராமல் சப்போட்டா தோப்பு பகுதி மக்கள் தினமும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 


    இதுகுறித்து நேரில் புகார் அளிக்க சென்றால் வேலூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சீட்டில் இருப்பதில்லை.  அப்படியே இருந்தாலும் கொடுக்கின்ற புகார்களை மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி வெங்கடேசன் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் சப்போட்டா தோப்பு பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறதா அல்லது மெத்தனம் காண்பித்து அலட்சியப் போக்கில் இதை அப்படியே விட்டுவிட போகிறதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்களுக்காக ஆட்சியாளர்களா அல்லது ஆட்சியாளர்களுக்காக மக்களா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

    செய்தியாளர் : வாசுதேவன் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad