• சற்று முன்

    சோழவந்தானில்அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை


    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் ரயில்வே மேம்பால பணிகளுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்திற்குள் வந்த பேருந்துகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக சோழவந்தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் இந்த நிலையில் ரயில்வே மேம்பால பணிகள் முழுமை பெறாத நிலையில் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் பேருந்து நிலையம்வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு குறிப்பிட்ட ஒரு சில பேருந்துகள் மட்டுமே பேருந்து நிலையத்திற்கு வந்து சென்று கொண்டிருக்கிறது அதிலும்  ஒரு சிலதனியார் பேருந்தும் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை என உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர் 


    குறிப்பாக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகங்களில் கடை வைத்திருப்பவர்கள் ஒரு சில பேருந்துகளை பேருந்து நிலையம் வந்து செல்வதால் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கட்டிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாத நிலையிலும் மாதா மாதம் கொடுக்க வேண்டிய வாடகை பணத்திற்கு கூட வருவாய் வராத காரணத்தினால் வர்த்தகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் அதிலும் எந்த ஒரு தனியார் பேருந்தும் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை என கூறும் பொதுமக்கள் நிலக்கோட்டை வத்தலகுண்டு அய்யம்பாளையம் திண்டுக்கல் கொடைரோடு விருதுநகர் போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பேருந்து எங்கே நிற்கும் என்ற விவரம் இல்லாததால் பல மணி நேரம் சோழவந்தான் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது இது குறித்து பலமுறை போக்குவரத்து நிர்வாகத்திடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் மனு அளித்த நிலையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    செய்தியாளர் : காளமேகம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad