தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் நெமிலி மற்றும் அவளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று 13.08.2024 தேதி உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் அவர்கள் போலீசார் தலைமையில் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
கருத்துகள் இல்லை