• சற்று முன்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்டது எடப்பாடி பழனிச்சாமி அரசியல் காரணமாக விமர்சனம் செய்து வருகிறார்!


    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்டது எடப்பாடி பழனிச்சாமி அரசியல் காரணமாக விமர்சனம் செய்து வருகிறார்!

    மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி!!

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூரில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 335 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அரசு வழங்கும் வீடுகள் ஒதுக்குவதற்கு லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன. எனவே பயனாளிகளிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் தகவல் தெரிவித்தால் லஞ்சம் கேட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வருவதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி சென்றுள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் ,

    அத்திக்கடவு அவிநாசி திட்டம் 90 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாகவும் இதற்கு திமுக சொந்தம் கொண்டாடுவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு நான் பதில் சொல்லவில்லை என்று கூறினார்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி  நாணயம் வெளியிட்டது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், தொடர்ந்து இதே போலதான் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து வருகிறார். இது தவறான செயல் . முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கும் நாணயங்கள் வெளியிடப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.

    பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்து தவறானது என்று கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

    நாணயங்கள் வெளியிடுவது மறைந்த தலைவர்களுக்கு ஒரு மரியாதை செலுத்தக்கூடிய சம்பவம். இதனை மாற்று கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு மாண்பு இருக்கிறது. மறைந்த தலைவர்களை பற்றி பேச மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார். அவர்  அப்படி பேசுவது தவறானது. கீழ்பவானி அணையில் நீர் கசிவு இருப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கீழ் பவானி கால்வாய்களை சீர்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அங்குள்ள விவசாயிகள் அதனை சரி செய்யக்கூடாது என தகராறு செய்து வருகிறார்கள். அவர்களின் பிரச்சனை சிறிது சிறிதாக சரி செய்து   அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாணயம் வெளியீட்டு விழாவிற்கு ஏன் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை என செய்தியாளர்கள் கேட்டனர். அதனை அரசிடம்  தான் கேட்க வேண்டும் என அமைச்சர் பதிலளித்தார்.

    கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் ,

    காவேரி குண்டாடி இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் தான் ஈடுபட்டு வருகிறது. என்று  அமைச்சர் துரைமுருகன் கூறினார். தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த திட்டத்தை நிறைவேற்ற தான் தொடர்ந்து முயற்சி செய்வேன் என்று அமைச்சர் கூறினார்

    இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், 1-வது மண்டலகுழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad