கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேவர் பிளாக் சாலையை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலையை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஞ்சாயத்து உள்பட்ட லட்சுமி மில் மேல காலனி மற்றும் இனாம் மணியாச்சி செல்லியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலையை அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய் பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அம்பிகை பாலன்,கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் போடு சாமி, மாணவரணி ஒன்றிய இணைச் செயலாளர் விக்னேஷ், இனாம் மணியாச்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் ரேவதி, பிரபா, தாமோதரன், மாரிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை