கந்திலி பகுதியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவர் கைது! ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை!
அட்டியாவில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் 10 கிலோ அளவில் கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இருவரும் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு பெங்களூர் நோக்கி பேருந்தில் செல்வதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானூக்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் உலகநாதனுக்கு கொடுத்த தகவலின் பேரில் உலகநாதன் மற்றும் மதுவிலக்கு போலீசார் கந்திலி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்தப் பேருந்தை நிறுத்தி பேருந்தில் பயணித்த சந்தேகத்திற்குரிய இருவர் இறக்கி அவரை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது மேலும் இருவரையும் கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் விசாரணையில் இவர் ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த பிரதோஷ் ஹலாம் (22) மற்றும் அஸ்லாம் அன்சாரி (22) என்பது தெரிய வந்தது. முன்னதாக அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்று குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : ந.வெங்கடேசன்
கருத்துகள் இல்லை