ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த நான்கரை லட்சம் மதிப்புள்ள 9கிலோ கஞ்சா பறிமுதல்!
விசாகப்பட்டினம் கொல்லம் செல்லும் சிறப்பு ரயிலில் கஞ்சா கடத்துவதாக சென்னையில் உள்ள குற்ற புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் குற்றப் புலனாய்வுத்துறை உதவி காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி காவல் ஆய்வாளர் கோபால் ஆகியோர் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் சோதனை மேற்கொண்டு வந்தனர்
அப்போது விசாகப்பட்டினம் கொல்லம் சிறப்பு ரயில் பரிசோதனை செய்ததில் கழிவறை முன்பு இருந்த ஜெனரல் பெட்டியில் ஐந்து பண்டல்களில் இருந்த 9 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் வருவதை கண்ட கஞ்சா கடத்தல் நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ரயிலில் இருந்த நான்கரை லட்சம் மதிப்பிலான ஒன்பது கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவைவேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
செய்தியாளர் : ந.வெங்கடேசன்
கருத்துகள் இல்லை