திமிரி ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கோலாகலம்!
திமிரி கோட்டை தனுமத்யம்பாள் சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ தேர்த் திருவிழா கோலாகலமாக நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ,திமிரி கோட்டை தனுமத்யம்பாள் சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கடந்த 13ஆம் தேதி கிராம தேவதை ஸ்ரீ பொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார். இதையடுத்து 14ஆம் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவமும், 15ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காமதேனு வாகன ஊர்வலமும் நடந்தது. இதைத் தொடர்ந்து 16ஆம் தேதி அன்ன வாகனத்தில் வீதியுலாவும், 17ஆம் தேதி பூத வாகனத்தில் வீதியுலாவும், 18ம் தேதி நாக வாகனத்தில் வீதியுலாவும், 19ஆம் தேதி ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், 20ஆம் தேதி யானை வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது. இதைத் தொடர்ந்து 21ம் தேதி மகா ரதம் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. 22ம் தேதி குதிரை வாகனத்தில் எழுந்தருளலும், 23ம் தேதி மாவடி சேவையும், 24ம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மும் நடந்தது. பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வே.சங்கர், தலைவர் சோ.சம்பத், செயலாளர் டி.ஏ.சண்முகம், பொருளாளர் என்.என்.ஏ.ஏகாம்பரம், துணைத் தலைவர் ஆர். எஸ்.குணசேகரன், துணை செயலாளர் எஸ்.ஏ.சங்கர், திமிரி பேரூராட்சி தலைவர் மாலா இளஞ்செழியன், துணை தலைவர் கௌரி தாமோதரன், கோயில் அர்ச்சகர்கள் டி.எஸ்.வைத்தியநாத குருக்கள், டி.எஸ்.சந்திரசேகர் குருக்கள், டி.எஸ்.சுந்தர் குருக்கள், டி.எஸ்.சங்கர் குருக்கள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வாசுதேவன்
கருத்துகள் இல்லை