Header Ads

  • சற்று முன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து தோழமை கட்சியினர் இணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து தோழமை கட்சியினர் இணைந்து பாஜக அரசு அல்லாத பிற மாநிலங்களை வஞ்சிக்கு விதமாக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து தோழமை கட்சியினர் இணைந்து மத்திய  அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது

    மத்திய பாஜக அரசு பாஜக கட்சியின் ஆட்சி அல்லாத மாநில அரசுகளின் உரிமையை வஞ்சிக்கும் வகையில் நிதி பகிர்வு செய்து வருவதாகவும் மேலும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருவதை கண்டித்தும் ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க மறுப்பதுடன் மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பது போன்ற பல்வேறு பிரச்சாரங்களை மத்திய அரசுக்கு எதிராக தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக கட்சியினர் திமுக கட்சியினர் இந்திய தேசிய காங்கிரஸ் திராவிட கழகம் முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

     ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad