Header Ads

  • சற்று முன்

    நூதன முறையில் பணம் மோசடி வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டத்தால் பரபரப்பு


    நூதன முறையில் பணம் மோசடி செய்த இரண்டு வழக்கறிஞர்! வழக்கறிஞர் மீது பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டத்தால் பரபரப்பு


    திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த காக்கங்கரை கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பத்துார் எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது காக்காங்கரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன்  ராஜவேலு மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் வழக்கறிஞர்களாக உள்ளனர். இருவரும் கூட்டு சேர்ந்து வெளிமாநில போலீஸ் சீருடை அணிந்த 5 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது ஏதோ ஒரு வழக்கு இருப்பதாக கூறி தங்களிடம் நுாதன முறையில் ரூ.ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ் பி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.

    ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறியும் இன்று திரும்பவும் இரு வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்ட மல்லிகா, சண்முகம், முனியப்பன், காவேரி முனியாண்டி, அஞ்சலி, உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது திடீரென மனு கொடுக்க வந்தவர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் படுத்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் 

    மேலும் திரும்பவும் இரண்டு வழக்கறிஞர்கள் மீது புகார் மனு கொடுக்க சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சிறிது நேரம்  பரபரப்பு காணப்பட்டது.


    செய்தியாளர் : நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad