கழக கொடி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
தேசிய முன்னேற்ற திராவிட கழகம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தேமுதிக கட்சியின் கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன. ஒரு மதம் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சி அலுவலகத்தில் தேமுதிக கட்சி கொடி முழு கம்பத்தில் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் பிரேமலதா அவர்கள் கொடி ஏற்றும் போது கொடி அறுந்து விழுந்தது. இதனால் சில மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. அரைமணி நேரம் கழித்து கொடி சரிசெய்யப்பட்டு ஏற்றப்பட்டது .
இதுவரை எங்களுக்கு இருந்த தடைகள் நீங்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக கட்சியை விஜயகாந்த் துவங்கினாரோ அவரது எண்ணம் போல் கட்சி செயல்படும். கூடிய விரைவில் தலைவர் விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட பணிகள் துவங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார் .
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






கருத்துகள் இல்லை