• சற்று முன்

    திருப்பத்தூர் அடுத்த கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வக கட்டிடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

    திருப்பத்தூர் மாவட்டம், கரியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில்  ஆய்வகத்திற்கென தனி கட்டிடம் இல்லாமல் இருந்தது. இதற்காக தனி இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. 


    இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்புரையாற்றினார். கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஒன்றிய குழு துணை தலைவர் மோகன்குமார், கல்லூரி முதல்வர் சீனிவாசகுமார், இயற்பியல் துறை தலைவர் நரசிம்மன் ஆகியோர்  பங்கேற்றனர். 

    புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் படிப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால் சூழ்நிலை வாழ்க்கையை மாற்றும்.  கல்லூரி பருவம் மிக முக்கியமானது. அதை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயரலாம். 

    நாம் எப்படி படிக்கிறோம் என்பதை தீர்மானிக்கலாம்.  ஒவ்வொருக்கும் இலக்கு முக்கியம். எண்ணம் தான் உங்களை அழகாக்கும்.  பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். உங்கள் பெற்றோரிடம் எதையும் எதிர்பார்க்காதே. அன்பை எதிர்பாருங்கள். யாரும் காதலிக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் உயர்ந்து படித்து வெற்றிப்பெற்றால் எதுவும் தானாக கிடைக்கும். எனது பெற்றோர் எனக்கு கை செலவுக்கு பணம் கொடுப்பார்கள் அதை கொண்டு புத்தகம் வாங்குவேன். படித்தால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும். 

    நான் முதல்வன் திட்டம் பயனுள்ளதாக உள்ளது. பல்வேறு நல்ல திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அனைவரும் படித்து முன்னுக்கு வாருங்கள் என்றார்.

    திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்‌. : ந.வெங்கட், 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad