• சற்று முன்

    மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் அமைச்சர் மூர்த்தி தகவல்


    மதுரை அவனியாபுரம் பாலமேடு மற்றும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகின்ற 15 16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளை வணிகவரி மற்றும்  பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி தமிழக அரசு சார்பில் மதுரை அலங்காநல்லூரில் வருகின்ற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் அமைந்துள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க வருகை தர உள்ளார் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் அங்கே நடைபெறும் அதற்கு முன்னதாக பாலமேட்டில் 16ஆம் தேதி பாலமேடு பொது மகாலிங்கசாமி மடத்து கமிட்டி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டியையும் அவனியாபுரத்தில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது ஜல்லிக்கட்டு போட்டி போட்டியில் முதல் பரிசு பெறும் காளை மற்றும்  அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது  இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது சிறப்பான முறையில் நடைபெற மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு 

    கீழக்கரையில் உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண முதலமைச்சர் வருகை தர உள்ளார் மேலும் அமைச்சர் உதயநிதி மற்றும் மற்ற அமைச்சர்களும் அங்கு வருகை தர உள்ளார்கள் என்று தெரிவித்தார்...

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad