Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் மான்கள் மற்றும் பன்றிகளால் 200 ஏக்கர்களில் இரவோடு இரவாக அழித்து சேதமடந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகா தெற்கு மயிலோடை கிராமத்தில் உள்ள தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் சுமார் 200 மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் மான்கள் மற்றும் பன்றிகளால் பல 200 ஏக்கர்களில் இரவோடு இரவாக அழித்து சேதமடந்துள்ளது. இராஜாபுதுகாகுடியை சேர்ந்த கனேசன் என்பவரின் மகன்  மகேஷ்குமார் வயது 35, இவர் தலையால் நடந்தான் குளம் கிராமத்தில்  10 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றனர்.


    இவருடன் அப்பகுதியில் அக்கிணியம்மாள் 12 ஏக்கர், விக்னேஷ் 3 ஏக்கர் மற்றும் இசக்கியம்மாள், வேல்முருகன், இஸ்ரவேல் ஆகியோர் 120 மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த பயிர்களை நள்ளிரவில் ஐயம்பதுக்கும் மேற்பட்ட மாண்கள் விளை நிலங்களுக்குள் நுழைந்து இரவோடு இரவாக பயிர்களில் உள்ள கதிர்களை தின்றும் அவற்றின் கால்களால் சமட்டியும் நாசப்படுத்தியுள்ளன. இந்த மக்காசோளப் பயிர் பயிரிடப்பட்ட அக்கினியம்மாள் கண்ணீர் மல்க கூறுகையில் நான் 12ஏக்கர் பரப்பளவில் மக்காசோளப்பயிர் பயிடப்பட்டுள்ளேன் 

    இந்த பயிர்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் இதில் மாண்கள் மற்றும் பன்றிகள் நாசப்படுத்தி அளித்துள்ளது.நான் ஏக்கருக்கு ரூபாய் 30ஆயிரம் வரை செலவுசெய்து கடன்கள் வாங்கி தோட்டத்தில் சுற்றிவர வலை பின்னல் வேலி 60ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளேன்..இந்த பயிர்கள் இப்படி அழியும் என கணவிலும்கூட நிணைத்து பார்க்க வில்லை.நான் வட்டிக்கு பணம் வாங்கி பயிரிட்டேன். ஏக்கருக்கு 30ஆயிரம் வீதம் 3லட்சத்து ஐம்பது ஆயிரம் செலவு செய்து வீணாகி  போய்விட்டது.ஆகவே எனக்கு சேதமான பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு, வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.கயத்தாறு வட்டார பகுதியில் மக்காசோள பயிர் கள் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு தளவாய்புரம்,வெள்ளாளன்கோட்டை, சூரிய மினிக்கன் உள்பட ஏராளமான கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண்கள் தங்கி பயர்களை சேதப்படுத்தும் இப் பகுதியில் மான்கள் மற்றும் கட்டுபண்றிகளை கட்டுப்படுத்தினால் தான் விவசாயம் செய்ய முடியும் இல்லை என்றால் தரிசுநிலங்களாகவே போட்டு வாழ்வாதாரத்தை இழந்து நாகரங்களுககு் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad