குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

விபத்தில் காயம் அடைந்து மூளைச் சாவு அடைந்த 13 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்கள்

விபத்தில் காயம் அடைந்து மூளைச் சாவு அடைந்த 13 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்களின் கரங்களை பிடித்து கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டிய அமைச்சர்,ஆர் காந்தி            ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருள் பரிமளா ஆகிய தம்பதியர்களின் இரண்டாவது மகனான ராகவேந்திரா(13) என்பவர் கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் ராகவேந்திரா மூளைச் சாவு அடைந்த நிலையில் ராகவேந்திராவின் பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து ராகவேந்திராவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளனர்.



இதனை தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் இன்று இறுதி நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கள் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து அரசின் ஆணையின்படி  அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சி தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதையினை செலுத்தினர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர் காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு உடல் உறுப்பு தானம் செய்த அவர்களின் செயல்களை கண்டு இரு கரங்கள் கூப்பி தலை வணங்கி கண்ணீர் விட்டு அவர்களின் செயலை வெகுவாக பாராட்டினார்

மேலும்  மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோரிடம் அமைச்சர் கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டிய சம்பவம் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அனைவரின் மத்தியிலும் ஆழ்ந்த சோகத்தையும் நிகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஒருங்கிணைந்த மண்டல செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...🤝


கருத்துரையிடுக

புதியது பழையவை