தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார்
மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வெக்கேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு வழங்கப்பட்டது இதனை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார். இது பற்றிய விவரம் வருமாறு.
மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்தஜோதி அவர்களின் அதிகார பூர்வ வருகை விழா ஹோட்டல் ஜே. சி.ரெசிடென்சி அரங்கில் நடந்தது. நிகழ்விற்கு ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் சந்தீப் தலைமை தாங்கினார். செயலாளர் வாசுதேவன் அறிக்கை வாசித்தார். நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி சிறப்புரை ஆற்றினார்.
திருவாதவூர் ஏஞ்சல் தேவகி முதியோர் இல்லத்திற்கு ருபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை-க்கு (380 அமெரிக்க டாலர்கள்) ருபாய் 31,500/- மதிப்பில் நன்கொடை வழங்கப்பட்டது, நிகழ்வில் மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொசேனல் எக்ஸலன்ஸ் அவார்ட் வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார். நிகழ்வில் ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக், உதவி ஆளுநர் அந்தோணி பிரேம்குமார், ஆளுநர் வருகை மாவட்ட செயலாளர் சாந்தாராம், பொருளாளர் கன்னியப்பன், ஆடிட்டர் சேதுமாதவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை